News Channel

Social Change and family Dynamics

கும்பகோணம் கிளையின் சார்பில் 15/11/2025 அன்று ஒருநாள் தர்பியா நிகழ்வு (பயிற்சி/பண்பாட்டு நிகழ்வு) நடைபெற்றது.
 இதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் ஜனாப் சாதிக் பாஷா அவர்கள், 'முன்மாதிரி இயக்க ஊழியர்' என்ற தலைப்பிலும், 
ஜனாப் டாக்டர் பெரோஸ் கான் அவர்கள் 'தனிமனித சீர்திருத்தமும் குடும்ப உறவுகளும்' என்ற தலைப்பிலும் சிறப்புரைகளை ஆற்றினர். 
மதிய உணவு இடைவேளைக்குப்பின் புத்தகத் திறனாய்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் தொகுப்புரையை டாக்டர் பெரோஸ் கான் அவர்கள் வழங்க, நிறைவாக ஜனாப் சாதிக் பாஷா அவர்கள் நிறைவுரை வழங்கினார். 
இந்தத் தர்பியா நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் அபிமானிகள் என மொத்தம் 98 பேர் கலந்துகொண்டனர்னர்.
 இதில் 50 பெண்கள், 40 ஆண்கள் மற்றும் 8 GIO மாணவிகள் அடங்குவர். 
அல்ஹம்துலில்லாஹ், இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.