• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News Channel

திருச்சியில் பரிசளிப்பு நிகழ்ச்சி

*பரிசளிப்பு நிகழ்ச்சி*

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளையின் ஊடகத்துறை சார்பில் *நபிகளாரின் பொன்மொழிகள்* என்ற மையக்கருத்தில் *போஸ்டர் வடிவமைப்பு போட்டி-2023* நடத்தப்பட்டது
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 40 மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி இணையம் வாயிலாக 15.11. 2023 அன்று மாலை நடைபெற்றது. 
போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சகோ. நபில் அஹமது அனைவரையும் வரவேற்றார். 
சமரசம் இதழின் பொறுப்பாசிரியர் ஜனாப். வி.எஸ். முஹம்மது அமீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 
சமூக வலைதளங்களின் முக்கியத்துவம் குறித்தும், அதை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதை குறித்தும் பேசினார். 
மேலும், புத்தாக்கத் திறமையை பயன்படுத்தி சமூக வலைதளங்களில், எவ்வாறு செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வழிகாட்டலையும் வழங்கினார். 
JIH திருச்சி கிளை தலைவர் முனைவர். ஹஜ் மொய்தீன் வெற்றியாளர்களை அறிவித்து வாழ்த்துரை வழங்கினார். 

பெரம்பலூர் தஹ்சினா முதல் பரிசையும், 
திருச்சி அமீருன்னிஷா இரண்டாம் பரிசையும், 
திருச்சி நஃபில் அஹ்மது மூன்றாம் பரிசையும் பெற்றனர். 
வெற்றிப் பெற்றவர்களுக்கு கடந்த 19.11.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற நகர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் சான்றிதழ்களும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. முன்னதாக, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மின்-சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

 அல்ஹம்துலில்லாஹ்.