News Channel

கும்பகோணம் சத்திய சோலை அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி

19.07.2023 புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்பட்ட சத்திய சோலை அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கும்பகோணத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள் வணிகர்கள் மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை மௌலானா முகையதீன் அப்துல் காதர் மண்பையீ கும்பகோணம் முத்தையா நகர் பள்ளிவாசல் இமாம் அவர்கள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளைத் தலைவர் சகோதரர் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தலைமை உரை மற்றும் தலைமை தாங்கி நடத்தினார்கள்.
வரவேற்புரை சகோதரர் ஹாஜா மாலிக் அவர்கள் வழங்கினார்கள்.
துவக்க உரை சகோதரர் முஹம்மது யூனுஸ் மாவட்ட அமைப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை புரிந்த ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மௌலானா மௌலவி முஹம்மது ஹனீபா மண்பையி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சத்தியச் சோலை புதிய அலுவலகத்தை கும்பகோணம் குறிஞ்சி மெட்ரோ நிர்வாக இயக்குனர் ஜனாப் F. ஷஃபிகான் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை அலுவலகத்தை சீமாட்டி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜனாப் B.முஹம்மத் நவீத் நியாஸ் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
சத்தியச் சோலை புதிய அரங்கத்தை ஆற்காடு ஏஜென்சி நிர்வாக இயக்குனர் ஜனாப் A. ராஜா முஹம்மது அவர்கள் திறந்து வைத்தார்கள்.
நன்றி உரை சகோதரர் சையது முபாரக் அவர்கள் வழங்கினார்கள்.
ஏக இறைவனின் கிருபையினால் விழா இனிதே நடைபெற்று முடிவடைந்தது. எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டுமாக.