மே 11 2025
மணப்பாறை பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
திருவிழாவில் பங்குபெறும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்குவதற்காக மணப்பாறை ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் கிளை மற்றும் மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் சார்பாக நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மணப்பாறை கோவில்பட்டிரோடு பகுதியில் மணப்பாறை ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் கிளையின் தலைவர் ஜபருல்லா செயலாளர் காதர் பாஷா மற்றும் கிளையின் உறுப்பினர்கள் உதவியுடன் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
திருவிழாவில் மணப்பாறை பகுதியை சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்ட பந்தலில் நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை பருகினார்கள்.
திருவிழா கமிட்டியின் சார்பாக ஜமாத்அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மணப்பாறை கிளைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சகோதர சமய சொந்தங்களை சார்ந்த பெரும்பாலான மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்ததோடு உளமாற பாராட்டினார்கள் மேலும் இந்த நிகழ்வானது தினத்தந்தி நாளிதழில் செய்தியாக வெளிவந்தது.
மக்களின் கருத்தை இஸ்லாத்திற்கு ஆதரவாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை சுமார் 4 மணி அளவில் தொடங்கிய இந்த விழாவானது சுமார் 10 மணி அளவில் நிறைவுற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாகம் தீர்ப்பது மிகச்சிறந்த அறச்செயல் எனும் தலைப்பில் அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலில் தாகம் தணித்து மகிழ்வுற்றனர்.