News Channel

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு நடத்திய கவண ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன் பூர்வீக குடிமக்களை கொத்துகொத்தாகக் கொன்று குவிக்கும் சர்வதேச போர் விதிகளை மீறி மனிதன்மையற்ற செயலில் ஈடுபடும் இஸ்ரேலிய-ஜியோனிஸ ஆக்கிரமப்பாளர்களை கண்டித்தும் இதற்கு துணைபோகும் வல்லாதிக்க நாடுகளை கண்டித்தும் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு நடத்திய கவண ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 20-10-23 வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் கும்பகோணம் பழைய மீன் மார்கேட் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது சர்வதேச போர் விதிகளை மீறி மனிதன்மையற்ற செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கும்பகோணத்தை சார்ந்த அனைத்து சமுதாய சகோதரர்கள் சகோதரிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய கும்பகோணம் சாலிடாரிட்டி பொறுப்பாளர் சகோதரர் முஹம்மது ரியாஸ் மற்றும் வரவேற்புரை சகோதரர் ஆடுதுறை ரிஃபாயுதீன் .
இந்த கண்டன உரை நிகழ்த்தியவர்கள் முகமது நாசர் அல் புகாரி சாலிடாரிட்டி மாநில செயல் குழு உறுப்பினர், அப்துல் கலாம் ஆசாத் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர், திரு ராஜவேலு பகுஜன் சமாஜ்வாடி பார்ட்டி, அப்துல் ரஹ்மான் வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா, பக்ருதீன் அலி அகமத் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர், முகமது யூனுஸ் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் பாலஸ்தீன் பூர்வீக குடிமக்களை கொத்துகொத்தாகக் கொன்று குவிக்கும் சர்வதேச போர் விதிகளை மீறி மனிதன்மையற்ற செயலில் ஈடுபடும் இஸ்ரேலிய-ஜியோனிஸ ஆக்கிரமப்பாளர்களை கண்டித்தும் இதற்கு துணைபோகும் வல்லாதிக்க நாடுகளை கண்டித்தும் பேசினார்கள்.