*சகோதர சமய ஆசிரியர்கள் சந்திப்பு*
திருப்பூர் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்
மகளிர் அணி சார்பாக முதலிபாளையத்தில் இயங்கி வரும்
அரசு நடுநிலைப் பள்ளிக்கு விஜயம் செய்து
ஆசிரியர் மத்தியில்
திருக்குர்ஆன் குறித்து அறிமுக உரை நிகழ்தப்பட்டது.
திருக்குர்ஆன் என்றால் என்ன?
திருக்குர்ஆன் போதிக்கும்
வாழ்வியல், சமூகவியல் அரசியல்,
குறித்தும்
இறைத்தூதர் யார்?
அவர் அனுப்பப் பட்ட நோக்கம் என்ன?
இறைதூதரின் வழிகாட்டி யார்? திருக் குரான் உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையாக இருக்கிறது என்றும்,
திருக்குர்ஆன் மனிதகுலத்திற்க்கோர் அருட்கொடை என்றும்
திருக்குர்ஆன் குறித்து
தெளிவாக எடுத்துரைத்தோம்.
தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
*நபிகளாரின் சமூக உறவு*
என்ற புத்தகத்தை வழங்கினோம்
மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டார்.
மேலும்
நூலகத்துக்கு நபிகளாரின் சமூக உறவு என்ற புத்தகத்தை நூலகத்தில் வைக்குமாறு கேட்டுக் கொண்டோம்
இறைத்தூதர் குறித்த புத்தகமே இல்லை என்று நூலகப் பொறுப்பாளர்கள்
கூறினார்கள்.
சகோதர சமயத்தவர்களை சந்தித்து திருக்குர்ஆன் மற்றும் இறைத் தூதர் குறித்து அறிமுகம் செய்து நூல்கள் வழங்கி வந்தோம்.