News Channel

கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக ஒழுக்கமே சுதந்திரம்

கலந்துரையாடல் நிகழ்ச்சி


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் 
என்ற தலைப்பில் 19.10.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை ஈடன் கார்டன் 
வளாகத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நகர தலைவர் சகோதரர் சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.
 
நிகழ்ச்சியின் துவக்கமாக இறைவசனம் மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி ஓதினார். 
அதன் தமிழாக்கத்தை சகோதரர் பையாஸ் அஹ்மத் படித்தார்.
 
வானியம்பாடி இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் முனைவர் அபுபக்கர் சித்தீக் MSc, Mphil, PhD
ஒழுக்கம் சம்மந்தப்பட்ட ஆழிய பல கருத்துகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிறப்பாக உரையாற்றினார்.

கலந்து கொண்ட நபர்கள் அவர்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
 
 இறுதியாக சகோதரர் இப்ராஹிம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை சகோதரர் முஹம்மத் மாஸ் வழிநடத்தினார்.
 
எல்லா புகழும் இறைவனுக்கே