மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் கிளையின் சார்பில் மிலாடி நபியில் முஹம்மது நபி (ஸல்)அவர்களை அறிமுகம் படுத்தும் விதமாக மன்னார்குடியில் உள்ள பிரமுகர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் ஊழியர்களும், உறுப்பினர்களும் மற்றும் sio மணவர்கள், மகளிர் அணி போன்றவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
முன்னாள் உணவுத் துறை அமைச்சரும் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான (அதிமுக)உயர்திரு. R.காமராஜ் அவர்களை சந்தித்து அன்பளிப்பு & புத்தகம் வழங்கப்பட்டது அதன்பின்
மன்னார்குடி முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்MLA வேட்பாளரும் தரணி மெட்ரிக் & தரணி வித்யாலயா பள்ளிகளின் தாளாளருமான திரு. S. காமராஜ் அவர்களை சந்தித்து உரையாடினார்கள். அதன் பிறகு
மன்னார்குடி சுபாஷ் மெட்ரிக் பள்ளி தாளாளர் அவர்களை சந்தித்து அன்பளிப்பு & புத்தகம் வழங்கி நபிகள் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் பின்
இன்று மன்னார்குடி St.Joseph Hr Sec School சென்று தலைமையாசிரியை அவர்களை சந்தித்து அன்பளிப்பு & புத்தகம் வழங்கி நபிகள் குறித்து உரையாடல்கள் நடைபெற்றது அதன் பிறகு
Jih மகளிர் அணி பொறுப்பாளர் சகோ. சஹானாஸ் மற்றும் சமீமா பேகம் ஆகியோர் பரிசு& புத்தகம் வழங்கி நபிகள குறித்து கலந்துரையாடினர்.
மற்றும்
மன்னார்குடி காவல்துறை துணைகண்காணிப்பாளர் (DSP) அவர்களை சந்தித்து அன்பளிப்பு & புத்தகம் வழங்கி நபிகள் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.
Jih, Sio, சாலிடாரிட்டி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். புத்தகம் வழங்கி அறிமுகம் செய்வது Sio பொறுப்பாளர் மவ்லவி. அப்துல் முக்ஸித் சலாமி. உடன் இருந்தனர்