News Channel

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் சந்திப்பு

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை *இன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர செயலாளர் திரு. M.S. சபீர் அலி அவர்களும், மக்கள் தொடர்புச் செயலாளர் திரு. அப்துல் ஹக்கீம் அவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் கோவையில் சிறுபான்மை சமூகத்திற்கு தேவையான நலத்திட்டங்களைக் குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு முழுவதும் முழுமையான ஆதரவு வழங்கும் கடிதத்தையும் வழங்கினர். 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட மக்கள் தேர்தல் அறிக்கை 2024 ஐ வழங்கினர். 

இந்தியா முழுவதும் பாசிசம் வீழ்ந்து நாட்டு மக்கள் வளர்ச்சியை நோக்கி வீருநடை போட்டிட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ச்சியாக பணிகளை மேற்கொள்ளும் என்பதை முதல்வர் அவர்களிடம் தெரிவித்தனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்தியா கூட்டணிக்கு வழங்கியுள்ள ஆதரவுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

#Election2024 #Parliment #India #Alliance #DMK #JIH #Rahul #Stalin #Coimbatore