News Channel

ரமலான் இனிப்பு பரிமாற்றம்

"ரமலான் இனிப்பு பரிமாற்றம்"

திருப்பூர் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் &சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பாக 

இன்று 11.04.2024 வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 
ரமலான் பண்டிகையை கொண்டாடும் விதமாக 
சகோதர சமய
சகோதர சகோதரிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், தினசரி சந்தை, காங்கேயம் சாலை, ராக்கியா பாளையம், நல்லூர் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில்
சாலையோர கடைகள்,
மெடிக்கல்கள்,
சிக்னல்கள்,
 சாலையில் பயணிப்பவர்கள் அனைவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைவரும் இன்முகத்துடன் இனிப்புகளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் சிலர் இந்த பணிகளை பாராட்டி
கட்டி அணைத்து சகோதரத்துவத்தை மத நல்லிணக்கத்தை பேனும் வகையில் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.