News Channel

சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

சமூக நல்லிணத்திற்காக தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை செய்து வரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பு அமைப்பான சத்திய சோலை கும்பகோணம் கிளை மற்றும் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் இணைந்து 06.04.2024 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு கும்பகோணம் நைல் நகர் மஸ்ஜிதுல் அல் ரஹ்மான் பள்ளிவாசலில் சத்தியம் சோலை சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நைல் நகர் பள்ளிவாசல் நிர்வாகி மௌலவி முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப். அப்துல் கலாம் ஆசாத், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிகுடில் சாமிகள் மற்றும் அருட்தந்தை எட்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் குறிஞ்சி நகர், நைல் நகர்  சகோதர சமுதாய வாசிகள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் 100 நபர்களுக்கு மேலானவர்கள் கலந்து கொண்டார்கள்.