News Channel

மக்களைத் தேடி மக்களோடு நாம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

மக்களோடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

மன்னார்குடி ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து மக்களோடு நாம்

 என்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை தொடர்ந்து மன்னார்குடியில் நடத்தி வந்து கொண்டிருக்கிறது.

 இதில் ஏராளமான சகோதரச் சமூகத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு.
 இந்த நிகழ்ச்சியை மேலும் மேலும் சிறப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 எத்தனை பிரிவினை சக்திகள் நம்மிடம் தோன்றினாலும் நம்மளை பிரித்து ஆள முயற்சி செய்தாலும்.
 அந்த சூழ்ச்சிகள் எல்லாம் ஒருபோதும் தமிழ்நாட்டிலேயே செல்லாது ,செல்லுபடி ஆகாது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சிகள்.

 நிகழ்ச்சிக்கு மக்கள் அழைத்ததை விட அதிகமாக வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை  சிறப்பித்துக் கொடுக்கின்றனர்.

 எங்களை ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று கூறக்கூடிய மக்கள் தான் அதிகம் எங்களை ஏன் கூப்பிடவில்லை கூப்பிட்டிருந்தால் நாங்களும் வந்து கலந்து இருப்போம் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று என்று எங்களிடம் கோபப்படும் சகோதரர்கள் தான் அதிகம் .

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவில் பன்முகத்தன்மை அனால் வேற்றுமையே இல்லை என்பது நான் தமிழ்நாட்டினுடைய உண்மையான நிலை......

 செய்தி .....
 ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த்
மன்னார்குடி கிளை