News Channel

இளைஞர்களுக்கான இஃப்தார் விருந்து

இளைஞர்களுக்கான இஃப்தார் விருந்து 

சகோதர சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 19/ 3 /2024 அன்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள மக்கா நகர் ஊரில் 
சகோதர சமுதாயத்தை சார்ந்த இளைஞர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி உள்ளூர் மக்கா நகர் ஜமாத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . 
மக்கா நகர் அருகில் உள்ள மாணவர் விடுதியில் இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்கள் மற்றும் லந்தை பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக நோன்பு திறக்கக்கூடிய நிகழ்வில் அனைத்து இளைஞர்களும் உள்ளூர் ஜமாத்தார்களும் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டார்கள் மகரிப் தொழுகை முடிந்தவுடன் வருகை புரிந்த சகோதர சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவர்களுக்கும் , உள்ளூர் ஜமாத்தினருக்கும் விருந்து வழங்கப்பட்டது. அத்துடன் அந்த இளைஞர்கள் மத்தியில் மக்கா நகர் ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஆலிம், முகமது ஜாபர் அவர்கள் இஸ்லாத்தைக் குறித்து கலந்துரையாடினார்கள் ஏற்கனவே போதை ஒழிப்பு பிரச்சாரம் சமூக சீர்திருத்தத்துக்கான நிகழ்வுகளில் அம் மாணவர்களை தொடர்ந்து சந்தித்து வருகின்ற நிலையில் இந்த இஃப்தார் விருந்துக்கு அழைப்பு கொடுத்தவுடன் அந்த இளைஞர்கள் மன மகிழ்வோடு கலந்து கொண்டு விருந்தை ஏற்றுக்கொண்டு, நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் அவர்கள் மனதார தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து மகிழ்வோடு விடைபெற்று சென்றனர்.