சமூக நல்லிணக்க இப்தார் விருந்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள ஊராம் பட்டியில் 26/3/2024 கடந்த தேதி என்று சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊராம் பட்டி முஸ்லிம் ஜமாத் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளூர் மக்களாக இருக்கக்கூடிய அவர்களின் உறவுகள், நண்பர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராம்பட்டி முஸ்லிம் ஜமாத் ஜும்மா பள்ளிவாசலின் இமாம் ஆலிம் அக்பர் இக்பால் அவர்கள் சமூக நலினக்கத்தை போற்றக்கூடிய கருத்துகளை வந்திருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் கூறுகையில் ... இஸ்லாம் என்பது முஸ்லிம்களுக்கான மார்க்கம் அல்ல இது மக்களுக்கான மார்க்கம் அனைத்து மக்களுக்குமான மார்க்கம் தான் இஸ்லாம் அப்படித்தான் இறைவன் இஸ்லாத்தை அறிமுகம் செய்கின்றான். நாம் வாழக்கூடிய பன்மை சமூக சூழலில் சமூக ஒற்றுமை என்பது மிக முக்கியம் அவைகள் எந்த சூழ்நிலையிலும் கெட்டுவிடக்கூடாது பாலாக்கிவிடக்கூடாது அப்படி யாராவது அதற்கு முனைந்தால் அவர்களிடத்திலிருந்து சமூக ஒற்றுமை பாதுகாப்பது காலத்தின் கட்டாயம். இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் பல கருத்துகளில் முதன்மையான கருத்தாகவும் சமூக ஒற்றுமையை குறித்து பேசுகின்றது போன்ற கருத்துக்களை அவர்கள் தங்களுடைய உரையின் வாயிலாக வருகை புரிந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்.
வருகை புரிந்த மக்கள் உள்ளூர் ஜமாத்தார்களோடு சேர்ந்து நோன்பு துறந்து மகரிப் தொழுகைக்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு சமூக ஒற்றுமையை பறைசாற்றி சென்றனர்.