சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி
ராமநாதபுரம் ஓடைகுளம் ஊரில் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓடைகுளம் முஸ்லிம் ஜமாத் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ரமலான் மாதத்தில் சகோதர சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு அழைப்பு கொடுத்து இப்தார் விருந்து நடத்தப்படுவது வழமையாக இருந்து வருகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டும் கடந்த 30 /3/ 2024 அன்று சனிக்கிழமை சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக "ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி" அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு குமரேசன் ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் மேலகிடாரம் , ஜெயபாலன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேரந்தை , முத்துக் கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொத்தங்குளம் , பச்சம்மாள் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணாபுரம் , கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் தத்தங்குடி , வெண்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொத்தங்குளம் , தட்சிணாமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் ஆயிக்குடி , தினேஷ்குமார் ஜூனியர் R.i வருவாய்த்துறை ஓடைக்குளம் , தேவராஜ் பாண்டியன் இன்ஜினியர் சிறைகுளம் , மூக்காண்டி கிராம தலைவர் ஓடைக்குளம், உள்ளூர் முக்கியஸ்தர்கள், உள்ளூர் பொதுமக்கள், உறவினர்கள், சகோதர சமுதாயத்தை சார்ந்த இளைஞர்கள் என அனைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இந்நிகழ்ச்சியில் திரளாக அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் தங்களின் உரையின் வாயிலாக கூறுகையில்....
👉ஏன் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர்?
👉இந்த நோன்பின் மூலமாக சமூகத்திற்கு என்ன நன்மை இருக்கின்றது ?
👉இப்படியான இப்தார் நிகழ்வுகள் ஏன் நடத்தப்பட வேண்டும் ?
👉இந்த சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான அவசியம் என்ன ?
போன்ற செய்திகளை மிக ஆழமாக எடுத்துரைத்தார்கள்.
வருகை புரிந்த அனைவர்களுக்கும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.
அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு மன மகிழ்வோடு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி சிறப்படைந்தது.