30 மார்ச்
கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளையின் சார்பாக மேலக்காவேரியில் புதிய அலுவலகம் திறப்புவிழா நிகழ்ச்சி 30.03.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது ஜனாப். முகம்மது யூனுஸ் மாவட்ட அமைப்பாளர் JIH. இந்த நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் மௌலவி A. முகம்மது ஹனிபா மன்பஈ அவர்கள் தலைமை தாங்கினார்கள். துவக்கமாக மௌலவி. அல் ஹாபிழ் K. ஜாபர் சாதிக் நூரி தலைமை இமாம் ஜாமியாமஸ்ஜித் மேலக்காவேரி கிராத் ஓதினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை ஜனாப். M. முகம்மது அபுபக்கர் நாட்டாமை, மேலக்காவேரி, ஜனாப். M. அப்துல் அஜிஸ் MISWA தலைவர் மேலக்காவேரி, ஜனாப். P.S. யூசுப் KISWA தலைவர் கும்பகோணம், ஜனாப். S.M. அப்துல் ரஹ்மான் மேலாளர் ஸ்டார் மெட்ரிக்குலேஷன் பள்ளி கும்பகோணம்.
கும்பகோணம் ரஃபி அசொசியாட்ஸ் நிறுவனர் ஹாஜி M.N முஹம்மது ரஃபி அவர்கள் JIH மேலக்காவேரி புதிய அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை ஆற்றினார்கள்.
சென்னையில் இருந்து வருகை புரிந்த சமரசம் ஆசிரியர் ஜனாப். V.S முகமது அமீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திறப்புவிழாநிகழ்ச்சிக்கு மேலக்காவேரி ஜாமத்தார்கள், பெண்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்கள், ஊழியர்கள், SOLIDARITY மற்றும் SIO உறுப்பினர்கள் என்று திரளாக 100 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
6.27 மணிக்கு இப்தார் நோன்பு திறப்பதற்கான ஏற்பாடு செய்யபட்டிருந்தது
இறுதியாக கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் நன்றி உரையாற்றினார்