News Channel

நோன்பு திறப்பு நிகழ்ச்சி சகோதர சொந்தங்களுடன் உளம் திறப்பு

 மார்ச் 30 (30.03.24 )சனிக்கிழமை மணப்பாறை தக்வா பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 மாலை சுமார் 5.30 மணி அளவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சகோதர சொந்தங்களுடன் உளம் திறப்பு எனும் தலைப்பில் சகோதர சமுதாய சொந்தங்களுடன் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 மணப்பாறை JIH கிளையின் தலைவர் சகோதரர் ஜபருல்லா அவர்கள் விழாவினை துவங்கி வைத்தார்.
 தலைமை உரையினை சகோதரர் சையது முகமது சாஹிப் (JIH திருச்சி மண்டல பொறுப்பாளர்)அவர்கள் நிகழ்த்தினார். தலைமை உரையில் நோன்பு பேணுதலின் அவசியத்தையும் அதற்கான நோக்கங்களையும் சகோதர சொந்தங்கள் புரிந்து கொள்ளுமாறு தெளிவான முறையில் விளக்கினார். விழாவில் சிறப்புரையாற்ற  சகோதர் N.அமானுல்லா அவர்கள் (சேர்மன் சங்கமம் மல்டி கோ-ஆப்பிரடிவ் சொசைட்டி  மற்றும் இயக்குனர் அஸ்ஸலாமு அரபிக் கல்லூரி திருச்சி) வருகை புரிந்தார். சாதி மத மொழி இன பேதமற்ற சமுதாயத்தின் அவசியத்தையும் அனைவரும் இறைவனின் குழந்தைகள் எனும் திருக்குர்ஆன் விளக்கத்தையும் எடுத்துரைத்தார்.
 முத்தாய்ப்பாக சகோதர சொந்தங்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மட்டுமல்லாது பள்ளிவாசல்கள் எப்படி செயல்படுகின்றன மேலும் பள்ளிவாசலில் தொழுகை எப்படி நடைபெறுகின்றது என்பதை அவர்கள் பார்வையிடுவதற்கு    வேண்டுகோள் விடுத்தார்.
 இனிதே நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆனது சுமார் 90நபர்களுடன் நடைபெற்றது.
 சாதி மத கொள்கை மற்றும் பாலின பேதங்களைக் கடந்து விழாவில் மணப்பாறையின் சேர்மன் கீதா .மைக்கேல்ராஜ் அவர்கள்  மணப்பாறை நகர ஜமாத் தலைவர் J. முஹம்மது ஹனிபா, மணப்பாறை  பகுதியைச் சேர்ந்த மற்ற கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் பெண் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தலைப்பினருடன் இப்தார் விழா இனிதே நடைபெற்றது.
 இப்தார் விழாவிற்கு பிறகு நடைபெற்ற தொழுகையை சகோதர சொந்தங்கள் பார்வையிட்டார்கள்.
 பின்னர் சுமார் அரை மணி நேரம் இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கும் அதற்கான விளக்கங்களை சகோதரர் அமானுல்லா அவர்கள் தனக்கே உரித்தான முறையில் மிக சிறப்பாக விளக்கினார்.
 சுமார் 7:15 மணி அளவில் சகோதரர் ஜபருல்லா (தலைவர் JIH மணப்பாறை கிளை) நன்றி உரையுடன் விழா இறைவனின் அருளால் இனிதே நிறைவுற்றது.