News Channel

சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள்

இந்த வருடம் ரமலான் மாதத்தில் மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை,சகோதர சமயத்தவர்களுடன் இணைந்து
  நல் இணக்கத்தை வலுப்படுத்தும்விதமாக மன்னார்குடியில் உள்ள பல இடங்களில் சகோதரச் சமூதாயத்தோடு இணைந்து நோன்பு துறக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது.
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்த சமூகநல்லிணக்க இஃப்தார் நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை மன்னார்குடியில் மட்டும் 8 இஃப்தார் நிகழ்வுகளை நடத்தி இருக்கிறது.
 நம்முடைய ஒவ்வொரு உறுப்பினர் & ஊழியர்களின் வீடுகளிலும் அவர்கள் வசிக்கும் தெருக்களிலும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டே இருக்கிறது,
அல்ஹம்துலில்லாஹ் …

இன்ஷா அல்லாஹ் மேலும் வரக்கூடிய கூடிய நாட்களிலும் இந்த நிகழ்வுகள் தொடந்து நடைபெறும்.

அந்த வகையில் ….
 சமூக நல்லிணக்க  இஃப்தார் அமர்வு நமது இயக்க அபிமானி சகோ. தென்றல் அகமது தம்பி இல்லத்தில் , கீழராஜ வீதி முஹல்லாவில் நடைபெற்றது.
மவ்லவி.M.அப்துல் முக்ஸித் ஸலாமி அவர்கள் சிறப்புரை நிகழ்த்த இஃப்தார் அமர்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்
10 முஸ்லிமல்லாதோர்  உட்பட சுமார்_75 நபர்கள் கலந்த கொண்டனர்.