News Channel

புதிய முயற்சியும், ரமலான் நிகழ்ச்சியும்

மக்களைத் தேடி

மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ரமலான் நிகழ்ச்சிகள் .

பெரும்பாலும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் அலுவலகத்திலோ அல்லது ஏதாவது ஒரு  அரங்கத்திலோ நடத்துவதுதான்  வழக்கம்.
 ஆனால் இந்த முறை ரமலான் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் மக்கள் வசிக்கின்ற அந்த இடத்திற்கே சென்று நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு .
ஒரு புதிய முயற்சியை நமது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மன்னார்குடி கிளை இந்த முறை நடத்தி இருக்கிறது.
அதன்படி…
21/03/2024-அன்று கமாலியா தெருவில் உள்ள தெருவாசிகள் அனைவரும் (அனைத்து சமூக மக்களும்) கலந்துகொண்ட 
5-வது இஃப்தார் அமர்வு நடைபெற்றது .அதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மன்னார்குடி கிளை மகளிர் அணி  தலைவி சகோதரி A.சகானாஸ் அவர்கள் நிகழ்ச்சியை வழி நடத்த சகோதரி .பாசிலா அவர்கள் திருக்குர்ஆன் ஓதி இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் சகோ.நாகூர் ரியாஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த ஏராளமான தெருவாசிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . 20 முஸ்லிமல்லாதோர் உட்பட சுமார் 80 பேர் பங்கேற்ற சிறப்பான நிகழ்ச்சியாக இது முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்