News Channel

இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி  (SIO)

தீன் நகரில் மாணவ - இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் தீன் நகரில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) மாநில செயலாளர் ஃபாயிஸ் அவர்களின் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 17 3 2024 இஃப்தார் நிறைவு செய்த பின் மஃரிப் தொழுகைக்குப் பிறகு தின் நகரில் உள்ள மாணவர்களை, இளைஞர்களை ஒன்றிணைத்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) மாநில பொதுச் செயலாளர் மற்றும் இந்திய மாணவர் அமைப்பு (SIO) விரிவாக்க செயலாளர் சகோதரர் தவ்ஃபீக் அவர்களும் கலந்து கொண்டனர் அவர்கள் தங்களின் உரைகளில் கூறுகையில்,
" நாம் அனைவரும் பிரதிநிதிகள் (கலிஃபா) என்று குர்ஆன் கூறுகிறது.

நாம் பிரதிகள் என்ற முறையில் சில பொறுப்புகள் கடமையாக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவ இளைஞர்களாகிய நாம் எப்படி நிறைவேற்றுவது என்கிற வழிகாட்டுதல்கள் நமக்கு தேவைப்படுகிறது. அவ்வழிகாட்டுதல் களை வழங்கி நம்முடன் இணைந்து பயணிக்கிறது SIO.

நமது செயல்பாடுகள்:

1. இஸ்லாத்தின் பால் அழைப்பு
2. இஸ்லாத்தை உண்மை வடிவில் புரிந்து கொள்ளுதல்
3. இஸ்லாமாக வாழ்தல் 
4. இளைஞர்களின் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணல், அரசியல் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தீர்வு (தீனை நிலைநாட்டுதல்)
5. கல்வி, கல்வி வளாகங்களில் இஸ்லாமிய சூழலை உருவாக்கல்
6. மாணவர்களின் திறமையை அடையாளம் கண்டு அதை இறைவழியில் பயன்படுத்துதல்
போன்ற செய்திகளை வருகை புரிந்த மாணவ இளைஞர்கள் மத்தியிலே பேசப்பட்டது.

இருதியாக  SIO விரிவாக்க செயலாளர் சகோ தவ்ஃபீக் அவர்கள். SIO செய்து வரும் பணிகள் குறித்து உரையாற்றினார்.
குறிப்பாக, 
👉தர்பியா வகுப்புகள்,
👉ஜூனியர் எஸ்ஐஓ,
👉அழைப்புப் பணி,
👉சமூக சேவைகள்,
👉கல்விப் பணிகள்,
👉ஊடகம்.
போன்றவை குறித்து விவரித்தார்.
இந்நிகழ்வில் தீன் நகர் ஜமாத் தலைவர் ஜனாப் , இக்பால் , தீன் நகர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி ஜாபர் சாதிக் மன்பஈ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.