குராயூரில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
மதுரை மாவட்டத்திலுள்ள குராயூர் பகுதியில் ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குராயூர் முஸ்லிம் ஜமாத்தின் சார்பாக ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
All India Ideal Teachers Association ( AIITA) விருதுநகர் மாவட்டம் தலைவரும் , விருதுநகர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர். ஜனாப்: சையது ஹுஸைன் வருகை புரிந்தார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கமாக குராயூர் முஸ்லிம் ஜமாத் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் மவுலவி அப்துல் கரீம் இனாமி அவர்கள் இறைமறை வசனத்தை ஓதி வரவேற்புரையாற்றினார்.
சிறப்புரையாற்ற வந்த விருந்தினர் ரமலானே வருக ! என்கின்ற தலைப்பில் மிக சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள். அவர் உரையில் கூறுகையில் ரமலான் மாதத்தில் எண்ணிலடங்கா நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன யார் அதை புரிந்து அடைந்து கொள்கிறாரோ நாளை மறுமையில் அவர் பாக்கியசாலியாக மாறிவிடுகிறார். யார் அதை புரியாமல், கவனக்குறைவாக இருந்து விடுகிறாரோ மறுமையிலே அவர் பாக்கியம் அற்றவராக மாறிவிடுகிறார். ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி கூறினார்கள்: நோன்பு காலங்களில் நோன்பாளிகளில் சிலர் பாக்கியம் அற்றவர்களாக இருக்கிறார்கள் ? காரணம், அவருடைய உண்ணா நிலையும் பருகா நிலையும் பசியும் தாகத்தையும் தவிர வேறு எந்த நன்மையும் அவர்களுக்கு பெற்றுத் தராது. இந்த ரமலானில் அவர்கள் தங்களுக்கான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளாததன் விளைவாக வெறுமனே ரமலான் அவர்களை கடந்து சென்று விடுகிறது. அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானிலும் பாக்கியம் அற்றவர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார் . மகத்துவமான மாதம் நம்மை வந்து அடைந்திருக்கிறது இந்த மாதத்தை நாம் தொலைத்து விடாமல் பறிகொடுத்து விடாமல் அனைத்து அமல்களையும் செய்து நாம் மறுமையிலே பாக்கியசாலிகளாக மாற வேண்டும் என்று அவருடைய உரையில் பல ஹதீஸ்களை மேற்கோள் காட்டி சிறப்பான உரை நிகழ்த்தினார். குராயூர் ஜமாத்தின் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிக்கு முன் முன்னிலை வகித்தனர் . வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டனர் அழகுற நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தன.