வன்னிவயலில் சிறப்பு நிகழ்ச்சி
வன்னி வயல் ஜமாஅத்தின் சார்பாக 3/3/2024 தேதி சிறப்பு நிகழ்ச்சியாக ரமலானை வருக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக வன்னி வயல் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மவுலவி சாகுல் ஹமீது உலவி அவர்கள் கிராத் ஓதி வரவேற்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வன்னி வயல் ஜமாஅத் முஸ்லிம்கள் சூரக்கோட்டை முஸ்லிம்கள் ஜமாத்தார்கள் அனைவர்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றுவதற்காக ரமலான் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலவி சம்சுதீன் பைஜி அவர்கள் ரமலானை வருக ! என்கின்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அவர் கூறுகையில் ரமலானில் நாம் செய்ய வேண்டிய அமல்கள் குறித்து மிக தெளிவாக எடுத்துக் கூறினார். நோன்பு வைப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்.
தர்மம் செய்வதால் அதில் கிடைக்கக்கூடிய நன்மைகள்.
குர்ஆன் ஓதுவதால் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்.
இன்னும் ரமலான் என்பது மனித வாழ்வில் மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பெரும் பாக்கியம் என்பதை மிக அழகிய முறையிலே மக்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய வகையில் உரை நிகழ்த்தினார். இறுதியாக நன்றியுரையோடு வருகை புரிந்தவர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.