News Channel

ஊராம்பட்டியில் சிறப்பு நிகழ்ச்சி

ஊராம்பட்டியில்  சிறப்பு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள ஊராம் பட்டியில் 2/3/2024 அன்று ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரம்பட்டி முஸ்லிம் ஜமாத் சார்பாக ரமலானை வருக! சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்ச்சியின் துவக்கமாக ஊராம் பட்டி மக்தப் மதரஸா மாணவர் திருமறை வசனத்தை ஓதினார். இந்நிகழ்ச்சியை ஊராம் பட்டி ஜும்ஆ பள்ளிவாசல் ஆலிம் அக்பர் இக்பால் அவர்கள் வரவேற்புரையாற்றி அழகிய முறையிலே வழிநடத்தினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காண்டை ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி அப்துல் மாலிக் ஸலாமி அவர்கள் வருகை புரிந்தார்கள். 
ரமலானே வருக! என்கின்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் உரையில் கூறுகையில் மூன்று விஷயங்களை முதன்மை படுத்தி 
👉ரமலான் என்றால் என்ன 
👉ரமலானில் ஏன் நோன்பு கடமையாக்கப்பட்டது 
👉ரமலானில் செய்யக்கூடிய அமல்கள் என்ன என்பதை தெளிவாக கூறியும். 
👉மேலும், இந்த ரமலான் காலத்தில் அதிகமான இபாதத்துகள் செய்ய வேண்டும். 
👉குர்ஆனோடு தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். 
👉இறைவனுக்கு பிடிக்காத காரியங்களில் இருந்து விலகி வாழ வேண்டும். 
👉கிடைக்கப்பெற்ற ரமலானை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போன்ற செய்திகளை மிக அழகிய முறையிலே தங்களுடைய உரையில் அவர்கள் குறிப்பிட்டு காண்பித்தார்கள். 
ஊராம் பட்டி ஜமாத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என மக்கள் திரளாக பங்கெடுத்து நிகழ்வை சிறப்பித்து கொடுத்தனர். வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.