ரமலானே வருக ! நிகழ்ச்சி
ஓடைக்குளம் ஜமாத் சார்பாக 2/3/2024 அன்று எதிர் வரக்கூடிய ரமலானை சிறப்பிக்கும் வகையில் ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளர் ஜனாப் :நஜீர் ஹுசைன் தாயீ அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார் .
நிகழ்ச்சியின் துவக்கமாக ஓடைக்குளம் மக்தப் மதரஸா மாணவர் இறைமறை வசனத்தை ஓதி துவக்கி வைத்தார். அதன் பின் ஓடைகுளம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி ஆதம் அலி பைஜி அவர்கள் வரவேற்புரையாற்றி இந்த நிகழ்வின் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
பின் சிறப்புரை ஆற்ற வந்த நஜீர் ஹுசைன் அவர்கள் தங்களின் உரையின் வாயிலாக... ஆண்டுதோறும் வரக்கூடிய ரமலான் அதனுடைய பணியை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறது, ரஹ்மத்தை நம்மிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு முனைப்பு காட்டுகிறது, ஆனால் அதை பெறக்கூடிய இஸ்லாமிய சமூகம் முறையாக, முழுமையாக, ஆர்வத்தோடு, எதிர்பார்ப்போடு அதை அடைகிறார்களா என்றால் கேள்விக்குறியாக ? இருக்கின்றன. அல்லாஹுத்தஆலா இந்த ஆண்டு இந்த ரமலானை அடையக்கூடிய பாக்கியத்தை நமக்கு நெருக்கமாக நல்கி இருக்கிறான் இதில் எத்தனை பேர் அடைகிறோம் என்பது கேள்விக்குறியே ? இறைவனிடத்திலே இந்த ரமலானை முழுமையாக அடைய கூடிய பாக்கியத்தை வேண்டிய பிராத்தனை செய்ய வேண்டும். பாக்கியம் பெற்ற அவர்கள் இந்த ரமலானில் அதிகமான அமல்களில் செய்து பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய மக்களாக மாறவும், நாளை மறுமையில் சுவனம் செல்லக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தங்களின் உரையில் நோன்பை குறித்து அதன் சட்ட திட்டங்கள் வழிமுறைகளை குறித்து மிக சிறப்பாக உரையாற்றினார்கள்.
இறுதியாக நன்றியுரையோடு சிறப்பாக நிகழ்ச்சி நிறைவடைந்தன.