News Channel

ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி

ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி 

ராமநாதபுரம் சிக்கல் பகுதியில் உள்ள கோட்டை யேந்தல் ஜமாத்தின் சார்பாக 2/3/2024 தேதி ரமலானை வருக! சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக கோட்டை யேந்தல்  ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஆலிம் அப்துர் ரஹ்மான் தாஃவதி அவர்கள் கிராத் ஓதி வரவேற்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மதினா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஆலிம் முஹம்மது ரபிக் அவர்கள் சென்றார் வருகை புரிந்தார்கள். அவர் சிறப்புரை வாயிலாக மக்களுக்கு ரமலானை குறித்த செய்திகளை எடுத்து கூறினார்கள். அவர் கூறுகையில் மனித வாழ்வில் நிகழக்கூடிய பல காரியங்களுக்கு முன்னேற்பாடுகள் செய்வதை பார்க்கின்றோம். திருமண நிகழ்வானாலும், சரி வீட்டிலே நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வானாலும் சரி, நாட்கள் கணக்கில், வார கணக்கில், மாதக்கணக்கில் என்று முன்னேற்பாடுகள் தடபுடலாக அரங்கேறுகிறது . ஆனால் ! நாளை மறுமையிலே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய ரமலான் மாதம் வருகின்ற பொழுது முஸ்லிம் சமூகத்தில் அந்த ரமலான் மாதத்தை வரவேற்கும் நிலையை கண்டால் மனவேதனையாக இருக்கின்றன. ரமலானை குறித்த முன் திட்டங்கள் இல்லாத சூழலை பார்க்கிறோம். ஆகவே எதிர் வரக்கூடிய ரமலானில் இந்த நிலை இல்லாமல் நோன்பு நோற்பது குறித்தும்ஃ குர்ஆன் ஓதுவதை குறித்தும், தர்மம் செய்வதை குறித்தும், ஸஹர் - இப்தார் போன்ற அனைத்து அமல்களிலும் முன்னேற்பாடாக இருக்க வேண்டும். என்று அவர் தன் உரையில் எடுத்துக் கூறினார். 

இந்நிகழ்விற்கு கோட்டை யேந்தலில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் அனைவரும் திரளாக பங்கெடுத்தார்கள். வருகை புரிந்த ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.