ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி
மக்கா நகர் ஜமாதின் சார்பாக 2/3/2024 அன்று ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக தீன் நகர் ஜமாத் ஜூம்ஆ பள்ளிவாசலில் இமாம் மவுலவி ஜாபர் சாதிக் மன்பஈ அவர்கள் வருகை புரிந்தார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கமாக மக்கா நகர் மக்தப் மதரஸா மாணவர் குர்ஆன் வசனத்தை ஓத அதனை தொடர்ந்து மக்கா நகர் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் ஆலிம் முகமது ஜாஃபர் தாஃவதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர் சிறப்பு விருந்தினராக வந்த மௌலவி ஜாபர் சாதிக் மன்பஈ அவர்கள் தங்களின் உரையின் வாயிலாக... ரமலான் மாதத்தின் மகத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். அவர் கூறுகையில் அல்லா சுபஹானஹூதஆலா ஒவ்வொரு சமூகத்துக்கும் பல சிறப்புகளும் அந்தஸ்துகளும் வழங்கி இருக்கின்றான். இறுதியாக வந்த இந்த சமூகத்துக்கு கிடைத்த வெறும் பாக்கியம் என்னவென்றால் ரமலானில் வைத்திருக்கக்கூடிய லைலத்துல் கதர். அந்த லைலத்துல் கதிருடைய இரவை அடைந்தால் ஆயிரம் மாதங்களை விட சிறந்தது.
ஒரு மனிதன சராசரி ஆயுள் 60 இலிருந்து 70 என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள். ஒரு மனிதன் அடையக்கூடிய லைலத்தில் கதிருடைய நன்மையை கணக்கிட்டுப் பார்த்தால் 83 ஆண்டுகளும் 4 மாதங்களும் வருகின்றது. முன்னதாக நபிமார்களுடைய ஆயுட்காலங்கள் 800 ஆண்டு நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 800 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பது குர்ஆனின் மூலமாக நாம் அறிகின்றோம். இதற்கு முன்பாக வந்த அத்தனை நபிமார்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில். அனைத்து சமூகத்தை விட என்னுடைய சமூகம் தான் சொர்க்கத்தில் முதலில் செல்லும் என்றார்கள். எப்படி ? சிந்தித்துப் பாருங்கள் ஒரு லைலத்தில் கதிரை அடைந்தாலே 83 ஆண்டுகள் நன்மை செய்த கூலி கிடைக்கும் பொழுது. ஒரு மனிதன் தன்னுடைய ஆயுளில் பத்து லைலத்துல் கதிரை அடைந்தால் நூஹ் அலைஹிஸ்ஸலாம் சமூகத்தை விட அதிகமான நன்மை செய்ததாக நாம் மாற முடியும் போன்ற செய்திகளை மிக அழகிய முறையிலே எடுத்துக் கூறினார். நிகழ்ச்சி நன்றியோடு சிறப்பாக நிறைவடைந்தது.