News Channel

மக்தப் மதரஸா ஆண்டுவிழா மற்றும் ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி

மக்தப் மதரஸா ஆண்டு விழா & ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி

இரு விழா நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் மறவாய் குடி ஊரில் மக்தப் மதரஸா ஏழாம் ஆண்டு, ஆண்டு விழா நடைபெற்றது. மறவாய்குடியில் அன்னை கதீஜா (ரலி) பெண்கள் பைத்துல் மால் பெண்களால் நடத்தப்பட்டு வருகின்றன. 
கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்கள் பைத்துல் மால் சார்பாக மக்தப் மதரஸா ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் பெண்கள் பைத்துல் மால் சார்பாக ஏழாம் ஆண்டு ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மறவாய்குடி முஸ்லிம் ஜமாத் தலைமை ஏற்று நடத்தினார்கள். இந்த இரு விழா நிகழ்விற்கு இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளர் ஜனாப்; நஜீர் ஹுசைன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார் . இந்நிகழ்வில் ரமலானை வருக என்கின்ற தலைப்பில் மிகச் சிறப்பாக சிறப்புரையாற்றினார் அவர்கள் கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் மனித குலத்திற்கு அருளாக வரக்கூடிய ரமலான் மாதத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். வரக்கூடிய ரமலானுக்கு முன் திட்டங்களாக சில காரியங்களை தேர்வு செய்து அதில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். ரமலான் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள், வெகுமதிகள், சிறப்புகள். அதேசமயம், ரமலானை தவறவிட்டோம் என்றால் அதனால் ஏற்படக்கூடிய மறுமை இழப்புகள் என்னென்ன வென்று மிகத் தெளிவாக கூறினார். இன்னும் கூறுகையில்,
குர்ஆன் ஓதுதல், தர்மம்,ஸதகா, கூட்டு ஷகர், இஃப்தார், இரவு தொழுகை அதிக கவனம் செலுத்துவதோடு 
பாவங்களை மன்னிக்கப்பட நம்முடைய அமல்களை அதிகம் செய்து இறைவனுக்கு உகந்த அடியார்களாக நாம் மாற வேண்டும் என்று எடுத்துக் கூறி சிறப்பாக உரையாற்றினார். 

நிகழ்ச்சியின் இறுதியாக ஆண்டு விழாவில் பங்கெடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது. 
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உள்ளூர் ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் என சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் மதிய விருந்து ஜமாத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு திருவிழா  போல் இருந்தன.