புத்தக கண்காட்சி
இராமநாதபுரம் மாநகரில் 6 ம் ஆண்டு புத்தக கண்காட்சி 02.02.2024 முதல் 12.02.2024 வரை நடை பெற்றது.
இதில் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் ( IFT ) சார்பாக புத்தக அரங்கு எண் 37லில் போடப்பட்டது.
இந்த பத்து நாட்களும் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய புத்தக அரங்கிற்கு வரக்கூடிய சகோதர சமுதாயத்தை சேர்ந்த மக்கள் குர்ஆனை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சிறு விளக்கம் அளிக்கப்பட்டன . குர்ஆன் (இது) யாருக்கான வேதம், இந்த குர்ஆன் சொல்லக்கூடிய செய்திகள் என்ன?
என்பதை குறித்து கலந்துரையாடப்பட்டன. அதிக நபர்கள் குர்ஆனை விரும்பி வாங்கிச் சென்றார்கள்.
பத்து நாட்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட நபர்களை சந்திக்கப்பட்டது .
இன்னும் , புத்தக அரங்கிற்கு வரக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் நூல்களை குறித்து அவர்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன. வரக்கூடிய முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எடுத்து பார்க்க கூடிய புத்தகங்களை குறித்து புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்து , முன்னுரைகளை விளக்கியும் புத்தகத்தில் இதுதான் கூறப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு நபர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ஒரு வியப்பான செய்தி என்ன வென்றால் ஒரு சகோதரர் ஒருவர் நமது அரங்கிற்கு வந்தார். வந்தவர் குறிப்பாக மெளலானா மெளதூதி அவர்கள் எழுதிய புத்தகங்களை புரட்டிப் புரட்டி வாசிக்க துவங்கினார். அவரிடம் சென்று உங்களுக்கு என்ன மாதிரியான புத்தகம் வேண்டும் எப்படியான புத்தகங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று விசாரித்து அவர் பெயரை கேட்டபோது ஆச்சரியம்தான் ! அவர் சகோதர சமுதாயதத்தை சேர்ந்தவர் அவர் பெயர் சதீஸ் ஊர் RS.மங்களம் ( தேவிபட்டினம் அருகில்)
அவர் கூறினார் இஸ்லாமிய புத்தகங்களை நான் பெரிதும் விரும்பி வாசிப்பதுண்டு அதிலும் குறிப்பாக மௌலானா மௌலூதி அவர்களை பற்றி எனக்கு தெரியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் புத்தகங்களை வாசித்திருக்கிறேன் இந்த புத்தக அரங்கில் அவருடைய புத்தகம் ஏதும் உள்ளதா என்பதற்காக வந்தேன் என்று கூறிவிட்டு
மெளதூதி கேள்வி பதில் பாகம் 2- 3 பாகங்களை வாங்கி சென்றார்.
மேலும் இந்த புத்தகத்தின் முதல் பாகம் புத்தகம் விற்பனைக்கு வந்தவுடன் எனக்கு தெரிவியுங்கள் நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றும் அவர் கூறி விட்டு சென்றார். ( அப்போது கேள்வி பதில் முதல் பாகம் விற்பனைக்கு இல்லை அச்சகத்தில் இருந்தது என்று நிர்வாகத்தினர் கூறினார்கள்).
புத்தக அரங்கு நடைபெற்ற அந்த பத்து நாட்களும் அவர் தவறாமல் அனைத்து கடைகளுக்கும் வந்து புத்தகங்களை நின்று நிதானமாக பார்த்து வாங்கி விட்டு செல்லக்கூடிய ஒரு வாசகராக தென்பட்டார். இஸ்லாமிய சமூகத்திலே புத்தக வாசிபாளர்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஆனால் சகோதர சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும் இஸ்லாமிய புத்தகங்களை விரும்பி படிக்கக் கூடியவராகவும் அதுவும் குறிப்பாக சிந்தனை புரட்சி செய்த மௌலானா மௌதூதி அவர்களின் புத்தகங்களை வாசிக்கிறார் என்பது உண்மையிலே ஆச்சரியமாகத்தான் இருந்தன.