News Channel

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

கடந்த பிப்ரவரி மாதம் 10/2/2024 தேதி திருச்சி அஸ்'ஸலாமி அரபிக் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வருகை புரிந்தனர். 
அவர்களின் வருகையொட்டி ராமநாதபுரம் பகுதியில் உள்ள தீன்நகர் மற்றும் மறவாய்குடி ஊர்களில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இந்நிகழ்ச்சியில் வருகை புரிந்த மாணவர்கள் இரண்டு பகுதிகளிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். 
அழைப்புப் பணியின் முக்கியத்துவம், என்கின்ற தலைப்பிலும், இறையச்சம் என்கின்ற தலைப்பிலும்,
 ரமலானை குறித்த அறிமுகம் என்கின்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தப்பட்டது. 
நான்காம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய உரைகளில் மிக அழகிய கருத்துக்களை எடுத்துரைத்து. 
வருகை புரிந்த மக்களுக்கு அழைப்பு பணியின் அவசியத்தையும், தக்வாவின் முக்கியத்துவத்தையும், 
ரமலானின் மேன்மைகளையும், சிறப்பாக எடுத்துக் கூறி தங்களுடைய உரைகளை நிறைவு செய்தார்கள். 
வருகை புரிந்த மாணவர்களுக்கு உள்ளூர் ஜமாத்தின் சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 மதிய வேலையும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு.
 நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்களை மன மகிழ்வோடு வழி அனுப்பி வைக்கப்பட்டன.