News Channel

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா 

17/1/2024 அன்று குராயூரில்  பொதுமக்களால் விளையாட்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டன. அந்த விழாவிற்கு குராயூர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி , அப்துல் கரீம் இனாமி அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு,  அவர்களின் கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வானது குராயூர் பொதுமக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு நெருக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தது. 

காரணம் அப்பகுதியில் முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் நோன்பு காலங்களிலும் சகோதர சமுதாயத்தவர்களுக்காக நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி. 

ஆம் ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த சகோதர சமுதாய மக்களுக்கும் அழைப்பு  கொடுக்கப்படும் அதனை அவர்கள் இன்முகத்தோடு ஏற்று பள்ளிவாசலுக்கு வருவார்கள் குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் அந்த நிகழ்வுகளில் பங்கு எடுப்பார்கள். 

கடந்த ஆண்டு 2023 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முஸ்லிம் ஜமாஅத் மூலமாக நிதி திரட்டும் பொழுது சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்களும் நிதி வழங்கி அந்த மக்களுக்கு ஜமாத்தின் மூலமாக உதவி செய்தார்கள். இப்படி முஸ்லிம்களுக்கும் சகோதர சமுதாய மக்களுக்கும் ஒரு நெருக்கமான சூழல் இருப்பதின் விளைவாக அவர்கள் நடத்தப்படக்கூடிய நிகழ்வுக்கு முஸ்லிம்களை குறிப்பாக பள்ளிவாசலின் இமாம் அவர்களை முக்கியத்துவம் கொடுத்து அழைக்கப்பட்டு அவர்களின்  கரங்களால் பரிசு கொடுக்க பட வைத்தது  என்பது பாராட்டக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. 

இது வெறுமனே எதாச்சியாக நடைபெறவில்லை தொடர்ந்து அந்த மக்களிடத்தில் சகோதர வாஞ்சையோடு தொடர்பு வைத்தும் சுக துக்கங்களில் கலந்து கொண்டும் அவர்களோடு இணைந்து பணி செய்த தாக்கமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.