News Channel

மக்களின் தேர்தல் அறிக்கை வழங்குதல்

மக்களின் தேர்தல் அறிக்கை - 2024 
(People's Manifesto 2024) வழங்குதல்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சார்பாக மக்களின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் நகர பிரமுகர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு.திருச்சி சிவா, திரு. திருநாவுக்கரசு , CPI மற்றும் CPI(M) மாநில மாவட்ட பிரதிநிதிகளான திரு.செல்வராஜ், திரு. சிவா, திரு.ராஜா, த.மு.எ.ச மாநிலச் செயலாளர் கவிஞர்.நந்தலாலா, இராணுவ அதிகாரி (ஓய்வு) திரு.கந்தசாமி ஆகியோருக்கு மக்களின் தேர்தல் அறிக்கை - 2024  வழங்கப்பட்டது. 

சத்தியச்சோலை Jb. நாசர்,சாலிடாரிட்டி தமிழ் மாநிலத் தலைவர் Jb. கமாலுதீன்,JIH பொறுப்பாளர்கள் Jb.சலாம் மற்றும் Jb. சுல்தான் ஆகியோர் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.