செப் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
ஆசிரியர்களை போற்றும் விதமாக திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் வட்டம் சார்பாக மகளிர் அணி பிரிவு
(முதலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, படியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, முத்து நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளி, விஜயா புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பாரதி வித்யாபவன் பள்ளி, முத்துநகர் பால் வாடிப் பள்ளி மேலும் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ) போன்ற பள்ளிக் கூடங்களுக்குச் சென்று அங்கு பணியாற்றக் கூடிய ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்று நன்றியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இன்றைய நாளில் முக்கிய ஆசிரியர்கள் பற்றியும் அவர்களே சமூகத்தின் வழிகாட்டியும் வழங்கப்படுவார்கள் என்பதை நினைவுகூரும் ஆசிரியர் அவர்களுக்கு மேலும் உதயதாரகை, சமரசம் இதழ்கள், மடக்கோலைகள், மரக்கன்றுகள், திருக்குர்ஆன், பிரதி மகளிர் அணியினர் வழங்கினர். இந்த சந்திப்பில் 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சந்தித்தனர்.
12 மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டது. மேலும்
GIO - மாணவிகளும் கலந்து கொண்டு அன்பளிப்புகளை வழங்கினர்.