பிப்ரவரி 24
மணப்பாறை தக்வா பள்ளிவாசலில் ஒற்றுமையும் உயர்வும் என்ற தலைப்பின் அடிப்படையில்
சிந்தனைகள் ஒன்றுபட சிறப்பான அழைப்பு எனும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மணப்பாறை JIH கிளையின் தலைவர் ஜபருல்லா நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
குர்ஆனின் அல்அன் ஃபால் அத்தியாயத்தின்
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும், உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
(அல்குர் ஆன் : 8:46)
மேலும், இறுமாப்புடனும் (தன் மதிப்பை) பிற மக்களுக்குக் காட்டும் வகையிலும் தங்களுடைய இல்லங்களிலிருந்து எவர்கள் வெளியேறினார்களோ, மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 8:47)
எனும் வசனங்களுடன்
ஆரம்பிக்கப்பட்டது . திருச்சி JIH மண்டல பொறுப்பாளர் சகோதரர் சையத் முகமது அவர்கள் மனித இனத்திற்கான பொறுப்புகளையும் கடமைகளையும் குர்ஆன் அடிப்படையில் விளக்கினார். மனித படைப்பின் நோக்கம் சத்தியத்தின் பக்கம் அழைப்பது(த ஆஇலல்லாஹ் ) என்பதையும் நபிகள் நாயகம் பள்ளிவாசல்கள் எதற்காக அமைக்கப்பட வேண்டும் என்பதையும் பள்ளிவாசல்களுக்கான நோக்கங்களையும் ஹதீஸ் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் விளக்கினார்.
பள்ளிகளின் பொறுப்பாளர்களின் பணியும் அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும்
விவரித்தார்.
நபிகளாரின் சமூகத்தாரகிய நாம் ஒரு சமநிலையுடைய சமுதாயமாக படைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் சத்தியத்துக்கு சான்று பகர கூடியவர்களாக வாழ வேண்டும் என்பதையும் அழகிய முறையில் விளக்கினார்.
பொறுப்புகளை நிறைவேற்றுவதன் அவசியத்தையும் அதனை நிறைவேற்றாதவர்கள் மறுமை நாளில் விசாரிக்கப்படுவார்கள் என்பதையும் குர்ஆன் ஆயத்தின் அடிப்படையில் விளக்கினார். இஸ்லாமிய மக்கள் நிலைமைகளையும் அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய சரியான புரிதல்கள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி கூறினார்.
நபிகளார் அவர்கள் முகாஜிர்களையும் அன்சாரிகளையும் ஒருங்கிணைத்து அவர்களின் இதயங்களில் இணக்கங்களை ஏற்படுத்தியது போல் இஸ்லாமிய மக்களும் தங்களுடைய மற்ற சமூகங்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் அதன் மூலம் மக்களின் கருத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதையும் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதி பகுதியாக கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சுமார் நாற்பத்தைந்து நபர்கள் கலந்து கொண்டனர்.
இரவு உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.