கோவை திவ்யோதயா நிறுவனர் மறைந்த அருட் தந்தை திரு ஜான் பீட்டர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திவ்யோதயா அரங்கில் (18 - 02 - 2024) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் அவர்கள் உரையாற்றினார். அவ்வுரையில் மறைந்த ஜான்பீட்டர் அவர்கள் சமய நல்லிணக்கம் மேலோங்க பணி செய்ததை குறிப்பிட்டார்.
மறைந்த ஜான்பீட்டர் அவர்கள் கோவையில் அமைதியற்ற சூழல் நிலவியபோது அனைத்து மதத்தலைவர்களையும் ஒன்றிணைத்து அமைதி நிலவ களப்பணியாற்றினார். கல்வியில் பின் தங்கிய மக்கள் கல்வியில் சிறந்து விளங்க உழைத்தார். ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தும் அனைத்து நிகழ்வுகளிலும் பெருநாள் சந்திப்பு, நோன்பு துறப்பு, இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா, மற்றும் கல்வி விழா அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டு வாழ்த்தினார். ஜமாஅத்தே இஸ்லாமியின் மக்கள் சேவையை மனமாரப் பாராட்டினார். அவரது இழப்பு நல்லோர்களுக்கு பெரும் இழப்பாகும் என்று உரையில் குறிப்பிட்டார்.
அன்றைய மறை மாவட்டத் தலைவராக இருந்த பிஷப் வில்லியம் மோஸஸ் அவர்கள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மக்களுக்கு கடிதங்கள் வழங்கி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சிறுபான்மை மாணவர்கள் பயில ஆர்வமூட்டியதை நினைவு கூர்ந்தார். உரையை கூர்ந்து கவனித்த ஃபாதர் வில்லியம் மோஸஸ் அவர்கள் அப்துல் ஹக்கீம் அவர்களை அழைத்து வாழ்த்தினார்.
அன்றைய காலகட்டத்தில் திவ்யோதயா நிகழ்வுகளில் பங்கேற்ற Dr அறம் , (Dr வினு அறம் அவர்களின் தந்தை,) திரு கிருஷ்ண ராஜ வானவராயர் , கோட்டை LMJ ஜலீல் அவர்கள், வழக்குரைஞர் நந்தகுமார், பாஸ்கர், ராஜா செரீப், SIO Coimbatore உறுப்பினர்கள் மற்றும் பலரை நினைவு கூர்ந்து அப்துல் ஹக்கீம் பேசினார்.
இந்நிகழ்வில் பிஷப் ஃபவுல் ஆலப்பாட், முன்னாள் பிஷப் வில்லியம் மோஸஸ், காந்தி கிராம் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தர் திரு மார்க்கண்டேயன், திவ்யோதயா இயக்குனர் ஃபிரான்ஸ் சேவியர் மற்றும் சமூக ஆர்வலர்கள், கிருஸ்துவ கல்வி நிறுவனங்கள் பிரதிநிதிகள், சர்வ சமய தலைவர்கள், திருக்குர்ஆன் அறக்கட்டளை சார்பில் சகோதரர் ஜக்கரியா அவர்களும், JIH உம்மர் பாரூக் அவர்களும் கலந்து கொண்டனர்.