இஸ்லாமிய மாணவியர் அமைப்பு (GIO) கோவை மாநகரம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி 18-02-2024 அன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மதிப்புகளின் விரிவான ஆய்வாக அமைந்தது. பங்கேற்பாளர்கள் இஸ்லாமிய மார்கத்தின் பல்வேறு அம்சங்களான ஆன்மிகம் முதல் சமூகப் கட்டமைப்புகள் வரை அனைத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டிருந்தது இந்நிகழ்வில் 450 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
சகோ. அஃப்ரின் ஃபாத்திமா அவர்களின் திருக்குர்ஆன் வசனங்களுடன் துவங்கியது.
சமுதாயத்தில் புரிந்துணர்வும் ஒற்றுமையையும் நிலைபெறச் செய்வதன் முக்கியத்துவத்தைத் தனது தலைமையுரையின் வாயிலாக வலியுறுத்தினார் கோவை இஸ்லாமிய மாணவியர் அமைப்பின் தலைவர் சகோதரி மர்யம் ஃபர்ஹானா.
முஸ்லிம் சமூகம் சந்தித்து வரும் சமகால சவால்களை எதிர்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து துவக்க உரை நிகழ்த்தினார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் ஜனாப்.
P.S. உமர் ஃபாரூக்.
மாறிவரும் நவீன உலகில் முழுமையான இஸ்லாமியப் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து ‘360 டிகிரியில் இஸ்லாம்’ எனும் தலைப்பில் நிகழ்த்தப்பட்ட சிறப்புரையில் விளக்கினார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநில உறுப்பினர் ஜனாப். A.P. நாசர்.
தொடர்ந்து, பாலஸ்தீன மக்கள் எதிர்கொண்டு வரும் இஸ்ரேலிய இன அழிப்பையும் அவர்களது துயர நிலையையும் உணர்த்திடும் வகையில் அமைந்தது GIO மாணவியரின் மைம் நிகழ்ச்சி.
மஃரிப் தொழுகைக்குப் பின்னர், குழந்தை வளர்ப்பும் அதன் இஸ்லாமிய முக்கியத்துவத்தையும் விளக்கிடும் வகையில் முனைவர் ஷர்மிளா பானு அவர்களின் சிறப்புரை நடைபெற்றது.
முஸ்லிம் மொஹல்லா வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலும், சமுதாய விழுமியங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்த GIO மாணவியரின் நாடகத்துடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்ததுடன், சீராக வழிநடத்தினார் GIO கோவை செயலாளர் சகோ. ஃபசீஹா.
‘360 டிகிரியில் இஸ்லாம்’ நிகழ்ச்சி பார்வையாளர்களின் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பது ஆகிய அதன் இலக்கினை வெற்றிகரமாக அடைந்தது. பல்வேறு கோணங்களில் வழங்கப்பட்ட உரைகள் மற்றும் காட்சிகளின் ஊடாக முழுமையான இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சமகால பிரச்னைகளை உள்ளிட்டவைகளை தெளிவுபடுத்திடும் நிகழ்வாக இது அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.!