News Channel

நாடாளுமன்றத்தில் பாஜக MP ரமேஷ் பிதூரி கீழ்தரமான, மனத்தைக் காயப்படுத்தும் வார்த்தைகளால் பேசியதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வன்மையாக கண்டிக்கிறது

பத்திரிகை அறிக்கை

நாடாளுமன்றத்தில் பாஜக MP ரமேஷ் பிதூரி கீழ்தரமான, மனத்தைக் காயப்படுத்தும் வார்த்தைகளால் பேசியதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
வன்மையாக கண்டிக்கிறது
அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளது

செப்டம்பர்- 23.2023 
புது தில்லி:
பகுஜன் சமாஜ் கட்சியின் MP டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக MP  ரமேஷ் பிதுரி நாடாளுமன்றத்தில் பயங்கரமான, புண்படுத்தும், அசிங்கமான வார்த்தைகளுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசிய ஊடகச் செயலாளர் கே.கே.சுஹைல் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், “லோக்சபாவில் பகுஜன் சமாஜ் கட்சி MP டேனிஷ் அலிக்கு எதிராக பாஜகவின் MP ரமேஷ் பிதுரி பயன்படுத்திய பயங்கரமான, புண்படுத்தும் மற்றும் மோசமான வார்த்தைகள் ஒவ்வொரு நாகரீகமான இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. 

இச்செயல் பாராளுமன்றத்தின் தரத்தையும் கண்ணியத்தையும் தாழ்த்தியுள்ளது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மத அடையாளத்தை குறிவைத்து, அவரை தகாத வார்த்தைகளால் அவருக்கு எதிராக  இன ரீதியான அவதூறுகளைப் பயன்படுத்துவது, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டப்படும் வெறுப்பின் தெளிவான சான்றாகும். 

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதற்கும் நோக்கத்துடன் இவ்வாறு பேசியது அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் உள்ளது. அதுமட்டுமல்ல இது ஒரு குற்றமுச் செயலாகும். 

ரமேஷ் பிதூரி MP நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் குற்றத்தைச் செய்துள்ளார். 

 பிதூரியின் இழிவான கருத்துக்கள் பதிவுப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் அளிக்கும் அதே வேளையில், சபாநாயகர் இதுபோன்ற நடத்தையை மீண்டும் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்,
மேலும் பிதூரி கூறிய பேச்சால் எதிர்க்கட்சிகள் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

இருப்பினும், ரமேஷ் பிதூரியின் செயல்ஒரு சிறு கண்டனத்துடன் மன்னிக்கக்கூடிய ஒரு செயல் அல்ல என்பதாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கருதுகிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமியற்றுபவர்களின் இத்தகைய கீழ்த்தரமான மற்றும் வெட்கக்கேடான நடத்தையைக் கண்டுள்ள நமது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீதும் இது மோசமான பார்வையை கொடுத்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் குற்றவாளிகள் மற்றும் சமூகவிரோதிகளால் புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தப்படுவதால், இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை குலைக்கும் குற்றமாகும். 
 
இது அதிகாரத்தில் இருப்பவர்களின் தீவிர தேசியவாதத்தின் இயற்கையான வெளிப்பாடு. இது குக்கிகள், முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற குடிமக்களை தனிமைப்படுத்தவதன் மூலம் வளர்ந்து வருகிறது. 

பல ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ‘இஸ்லாமோஃபோபியா’ வெறுப்பு வெறி இருப்பதை அம்பலப்படுத்துகிறது. 
MP க்கள் குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 
இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் போனால், இதுபோன்ற செயல்கள் தற்போது சாதாரணமாகிவிட்டன என்ற ஆபத்தான நிலையை உருவாக்கும்.

 இதனால் இது போன்ற அழிவு செயலை செய்ய நினைப்பவர்கள் அச்சமடையமாட்டார்கள். மேலும் இது நமது பராம்பரிய விழுமம், பரஸ்பர மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை காயப்படுத்தும். 

ஆகவே ரமேஷ் பிதூரியை MP பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோரிக்கை வைக்கிறது.


சையத் காலிக் அகமது
ஊடகத்துறை உதவி செயலாளர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
தலைமையகம்
புது தில்லி - 110025