News Channel

நவீனப்படுத்தப்பட்ட லைஃப் ஜோன் இரத்தப் பரிசோதனை மையம் திறப்பு விழா.

நமது கரும்புக்கடைப் பகுதியில் எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை மிகக்குறைந்த விலையில் செய்துவரும் லைஃப் ஜோன் இரத்தப் பரிசோதனை மையம் தற்போது புதிய Hematology இயந்திரங்களோடு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நவீனப்படுத்தப்பட்ட இரத்தப் பரிசோதனை மையத்தை கோவை மாநகர துணை மேயர் மதிப்பிற்குரிய திரு. ஆர். வெற்றிச்செல்வன் அவர்கள் இன்று (13 பிப்ரவரி 2024) திறந்து வைத்து சிறப்பித்தார். இச்சிறப்பு நிகழ்வு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் ஜனாப். உமர் ஃபாரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஜமாஅத்தின் கோவை பெருநகரச் செயலாளர் ஜனாப். சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப். அப்துல் ஹக்கீம் அவர்கள், 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜனாப். அஹமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொடர்ச்சியாக மக்கள் சேவையாற்றி வரும் ஜமாஅத்தின் பணிகளை பாராட்டிய துணை மேயர் அவர்கள், அரசு சார்பில் ஜமாஅத்தின் மக்கள் பணிகளுக்கு தொடர் ஆதரவும், உதவிகளும் வழங்குவதாக உறுதியளித்தார்கள்.