News Channel

சென்னை கோணிமேடு கிளை சார்பாக மாதாந்திர சிறப்பு தஸ்கியா நிகழ்ச்சி

சென்னை கோணிமேடு கிளை சார்பாக மாதாந்திர சிறப்பு தஸ்கியா நிகழ்ச்சி 
11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  காலை 10.30 மணிக்கு ஃபார்ம் குருவில் (FarmGuru AgriTech Center) துவங்கியது.
இதில் மொத்தம் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் 10 குடும்பங்கள் கலந்து கொண்டார்கள்.
சகோ.சர்புதீன்  ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோணிமேடு கிளை அமீரே மகாமியின் தலைமையில் தஸ்கியா நிகழ்ச்சி நடைபெற்றது. 
அமீரே மகாமியின் குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
சிறப்பு பேச்சாளராக வருகை புரிந்த  மௌலவி.ஷேக் ஹாஃபிழ் இஸ்ஹாக் உமரி அவர்கள் தஸ்கியா பெறுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
தொழுகை மற்றும் உணவு இடைவேளை விடப்பட்டது
மதியம் 2:30 மணிக்கு இரண்டாவது அமர்வு தொடங்கியது.
இரண்டாவது அமர்வில்  ஜனாப்.ஐ.ஜலாலுத்தீன் அவர்கள் இயக்கமும் இயக்க உறவுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
நிறைவாக துஆ மற்றும் சிறுவர்களின் குளியலுடன் நிகழ்ச்சி முடிந்தது.