News Channel

Republic Day JIH Krishnagiri Unit Celebrations with Brotherhood

குடியரசு தின விழா

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக இன்று காலை 8.00 மணிக்கு நேதாஜி ரோடு பழையபேட்டை மதரஸா தாருஸ்ஸலாமில் நகர தலைவர் சிபகத்துல்லாஹ் அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். 
துவக்கமாக இறைவசனம் முஹம்மத் பாருக் ஓதினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் திரு ஜெயக்குமார், திரு சந்தோஷ், திரு முஹம்மத் அலி, திரு முஹம்மத் ஆசிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 சாலிடாரிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் திரு இப்ராஹீம் குடியரசு தினம் உருவாக்கத்தின் வரலாறு பற்றி  ஆழிய பல கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தார். 

நிகழ்ச்சியை முஹம்மத் சாலிஹா வழி நடத்தினார். தேசியகீதம் பாடி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.