News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மத்திய மண்டலத்தின் சார்பாக குடியரசு தின விழா கொண்டாட்டம்.

இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜமாஅத்தின் மத்திய மண்டல தலைவர் ஜனாப். பீர் முஹம்மது அவர்களின் தலைமையில் இன்று காலை கரும்புக்கடை காந்திநகர் பகுதியில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரபஞ்ச திருக்குறள் ஆய்வு அறவாரியத்தின் பொதுச் செயலாளர் முனைவர். மு.க. அன்வர் பாட்சா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியேற்றி நிகழ்வை சிறப்பித்தார்.

மேலும் 62வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. ரேவதி முரளி அவர்களும், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலின் பொறுப்பாளருமான துரு. தங்கவேல் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

தொடர்ந்து பகுதிவாழ் மக்களின் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பாக பங்கெடுத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.