அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பும் இணைந்து.
கடந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் சமத்துவ நாயகர் முகமது நபி (ஸல்)என்ற தலைப்பில் ஒரு மாத Campaign கிளையின் சார்பாக நடத்தப்பட்டது.
அதில் இறுதி கட்டமாக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.போட்டிக்கான பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது.
முதல் பரிசு ₹3000
இரண்டாம் பரிசு ₹2000
மூன்றாம் பரிசு ₹1000
இந்த பரிசு போட்டியை மன்னார்குடி, கூத்தாநல்லூர்,நீடாமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிகளைச் தேர்வு செய்து கட்டுரை போட்டியை நடத்த முடிவு செய்து.
அதன் படி
8 பள்ளிகள்,4 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுரை போட்டியின் கடைசி நாள் 31/10 / 2023 என முடிவுச் செய்யப்பட்டு அதன் படி மாணவ மாணவிகள் அனைவரின்.கட்டுரைகளும் முடிவு செய்யப்பட்ட அந்த நாளிலேயே வந்து சேர்ந்து விட்டன
அதன்படி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நாள்: 05.01.2024 (வெள்ளிக்கிழமை) நேரம் : மாலை 03.30 5.00 மணிக்கு
மன்னார்குடியில் அமைந்துள்ள யூரோ கிட்ஸ் ஸ்கூல், 3 பாக்கு பட்டரை தெருவில் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சிக்கு மன்னார்குடி ஜ.இ.ஹி கிளைத்தலைவர்
சகோ. N.மன்சூர் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக.
உயர்திரு. A.அஸ்வந்த் ஆன்ட்ரோ ஆரோக்கியராஜ்
காவல்துறை துணை கண்காணிப்பாளர், மன்னார்குடி.
உயர்திரு.ஆ.ஜே.அனிதா ரத்தினமேரி M.Sc., M.Phil.,B.Ed.,
தலைமை ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னாவல்கோட்டை
பேராசிரியர். M அமானுல்லா M.C.A,M.phil,
இயக்குநர், அஸ்ஸலாம் அரபிக் கல்லூரி, திருச்சி.
உயர்திரு. N.நீலன் அசோகன்
தாளாளர், நீலன் மெட்ரிகுலேசன் பள்ளி.
உயர்திரு.S.கோபாலகிருஷ்ணன்
ஒருங்கிணைப்பாளர் - நேசக்கரம்
செய்தியாளர் - இந்து தமிழ் திசை.மற்றும்.
சி.ரமேஷ் M.A., M.Phil., B.Ed.,
உதவி தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாவால் கோட்டை
ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகையை வழங்கினர்.
அடுத்து கட்டுரை போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நன்றி உரை சகோதரர் சர்புதீன் B.Sc.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நீடாமங்கலம்
அவர்கள் நிகழ்த்த இந்த நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
நிர்வாகம்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்
மன்னார்குடி கிளை