News Channel

போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு வாகனம்



போதை இல்லா தமிழ்நாடு பரப்புரையை முன்னிட்டு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – மதுரை மாவட்டத்தின் சார்பாக போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சார வாகனத்தை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. க.கல்லணை அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – மதுரை மாவட்ட பொறுப்பு தலைவர் ஜனாப் ஆவல் பீர் அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும், மதுரை மீடியா பொறுப்பாளர் சகோதரர் முஹம்மது ரஃபி, செயலாளர் சகோ.பசீர் அகமது மற்றும் பெண்கள் அணி, SIO மற்றும் GIO நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

போதைப்பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதை இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்தப் பிரச்சார வாகனம் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது.