போதை இல்லா தமிழ்நாடு – திருப்பூர் கிளை
முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் அவர்களுடன் சந்திப்பு
திருப்பூர்:
“போதை இல்லா தமிழ்நாடு” பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – திருப்பூர் கிளை சார்பில், மாநிலச் செயலாளர் A. முகமது காசிம் மற்றும் மாநகரத் தலைவி அம்சா பேகம் ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர், முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் அவர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, “போதை இல்லா தமிழ்நாடு” பரப்புரை இயக்கத்தின் நோக்கம், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வுப் பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு, கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
சந்திப்பின் நிறைவாக, போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் “போதை அழிவின் பாதை” புத்தகமும் “சமரசம்” இதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்திலும், ஆன்லைன் வழியாகவும் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் அவர்கள் பங்கேற்று, தனது ஆதரவை பதிவு செய்தார்.
இச்சந்திப்பு பயனுள்ள வகையிலும் சிறப்பான முறையிலும் அமைந்ததுடன், போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும், போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – திருப்பூர் கிளை