News Channel

JIH Women’s Wing Bayan on Hajj – Community Gathering


25.04.2026 அன்று உடுமலை கிளையில் வாராந்திர குர்ஆன் வகுப்பிற்கு வருகின்ற ஆதரவாளர் பெண்ணும் அவருடைய கணவரும் ஹஜ் செல்வதற்கான பயணத்திற்கு முன் உறவினர்களுக்கும் அண்டை வீட்டார்களுக்கும் சிறப்பு விருந்தும்  பயான் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்தனர். அதில் உரை  நிகழ்த்த ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த மகளிரணி சார்பாக அழைத்தனர். 
அதனடிப்படையில்

ஹஜ் ஒரு உயிரோட்டமான இபாதத் என்ற தலைப்பில் உடுமலை கிளை மகளிரணி தலைவி A. மெஹராஜ் உரையாற்றினார்கள்.

ஹஜ் என்பது சடங்கு ரீதியான இபாதத் அல்ல அது உயிரோட்டமான வரலாற்றின் அடிப்படையிலானது. அதில் நாம் கொண்டு செல்வது இறையச்சம் என்று உரையின் சாராம்சமாக அமைந்திருந்தது.

இதில் பெண்கள் ஆண்கள் என்று 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நமது ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.