News Channel

JIH Women’s Wing Special Bayan for Women – Kadathur Village



உடுமலை அருகே உள்ள கடத்தூர் கிராமத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்வு

25.04.2026 அன்று உடுமலை அருகே உள்ள குக்கிராமமான கடத்தூர் கிராமத்தில் அதன் பள்ளிவாசல் நிர்வாகிகள் jih உடுமலை கிளைத் தலைவரிடம்  பெண்களுக்குகான பயான் வகுப்பு நடத்துவதற்கு அழைத்ததன்  அடிப்படையில்  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உடுமலை கிளை  சார்பாக பெண்களுக்கான சிறப்பு நிகழ்வு நடைப்பெற்றது.

ஊழியர் வட்டப் பொறுப்பாளர் ஆயிஷா ஹக்கீம் அர்ரகீப் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

நிகழ்வின் மையக் கருத்தாக சமகாலத்தில் பெண்களின் நிலைப்பாடு என்ற தலைப்பில்  உடுமலை கிளை நாஜிமா மெஹராஜ் சிறப்புரை ஆற்றினார்.

 பெண்கள் தற்போது செல்போன்கள் மூலம் ரீல்ஸ் பார்ப்பதோடு மட்டுமல்ல ரீல்ஸ் போடுபவர்களாக இன்று நம் சமுதாய பெண்களும் இதில் சிக்கி உள்ளார்கள். இது எவ்ளவு ஆபத்தான இழிவான செயல் என்பதை உணர வேண்டும்.. மார்க்கம் நம் வாழ்வியல் நடைமுறையோடு தொடர வேண்டும்.

தவறான வழிகேடு நம் வீட்டு பெண்களை விழிப்புணர்வுடன் இருக்க செய்ய வேண்டும். இது போன்ற தவறான பாதையில் செல்ல விடாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற படிப்பினைகள் பற்றி உரை அமைந்திருந்தது.

மக்கள் கருத்தாக   எங்கள் குடும்பத்திற்குள் அமர்ந்து பேசுவது போல் உணர்வுபூர்வமாக அமைந்தது என்று பெண்கள் மகிழ்வுடன் தெரிவித்தார்கள்.

பள்ளி நிர்வாகிகளும் மாதம் ஒரு முறை பயான் வகுப்பு நடத்த வருமாறு கேட்டுள்ளார்கள்.

100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.