News Channel

திருப்பூர் GIO வின் மே தின தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சி



1-5-26 அன்று மே தினத்தை முன்னிட்டு
GIO திருப்பூர் மாணவிகள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த காவல் துறை பணியாளர்
மற்றும் பழைய பேருந்து நிலையம் சுற்றுவட்டாரத்தில் பணிபுரியும் சாலை  தூய்மை பணியாளர்கள்,
தினக்கூலி தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர்.
அவர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி, அன்பான வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த முயற்சி தொழிலாளர்களை கௌரவிப்பதும் உழைப்பின் மரியாதையை ஊக்குவிப்பதும், அர்த்தமுள்ள  பாராட்டுகளின் மூலம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டது.

GIO திருப்பூர் மீடியா