News Channel

ஞானபீட விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை ஜமாஅத் சார்பில் வாழ்த்து சந்திப்பு

இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக 25 மார்ச் 2026 அன்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், சமரசம் இதழ் மற்றும் இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட் (IFT) ஆகியவற்றின் பணிகள் குறித்து அறிமுகப்படுத்தி, அவற்றின் நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினரும் சென்னை மாநகரத் தலைவருமான N. நசீர் அதாவுல்லாஹ், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினரும் சமரசம் இதழின் பொறுப்பாசிரியருமான வி. எஸ். முஹம்மத் அமீன், சென்னை மாநகரச் செயலாளர் அஷ்ரப் அலீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நினைவாக சமரசம் இதழும், IFT வெளியிட்ட நூல்களும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பு இலக்கியமும் சமூகப் பணியும் இணையும் அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.