சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) நீடாமங்கலம் வட்டத்தின் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வு நடந்தது.
நிகழ்வை நீடாமங்கலம் JIH பொறுப்பாளர் சகோ. சர்புதீன் மற்றும் நீடாமங்கலம் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் மன்னார்குடி JIH தலைவர் சகோ. மன்சூர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
நீடாமங்கலம் நூருல் ஹுதா பள்ளியின் தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்வில் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்,
அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் இயக்குனர் பேராசிரியர். N.அமானுல்லாஹ்,
நீடாமங்கலம் புனித மேரிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி சவேரியம்மாள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்வில் அனைத்து சமூக மக்களும்,ஊர் முக்கியஸ்தர்கள் , அனைவரும் முழு ஒத்துழைப்புடனும் ஈடுபாடுடனும் கலந்துகொண்டு அனைவரும் ஒன்றாக நோன்பு துறந்தனர்.
நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் பகுதியில் இஸ்லாம் குறித்தும் நிகழ்வு குறித்தும் பல்வேறு விஷயங்களை கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த பகுதி கோவில் தர்மகர்த்தா ஒருவர் அடுத்த வருடம் இஃப்தார் நிகழ்ச்சி எங்களது கோவிலில் நடத்தப்படவேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம் என கூறியு குறிப்பிடத் தக்கது.
நிகழ்வில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த 120 நபர்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வை கூத்தாநல்லூர் JIH பொறுப்பாளர் S. சபீர் அலி தொகுத்து வழகினார். இறுதியாக நீடாமங்கலம் Jih வட்ட பொறுப்பாளர் சகோ. சர்புதீன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது...