News Channel

" இரங்கல் செய்தி"

" இரங்கல் செய்தி"

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், 
விடுதலை போராட்ட வீரர்,
மக்கள் நலப் போராளி, 
எளிமையின் சின்னமாக வாழ்ந்த 
தோழர் ஐயா நல்லகண்ணு அவர்கள் (1925–2026) 
வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த செய்தி 
கவலையை தருகிறது.

தன் 101 ஆண்டுகால வாழ்க்கையில், 
அரசியல் என்பது அதிகாரத்திற்காக அல்ல
மக்கள் சேவைக்காக என்பதை வாழ்ந்து காட்டியவர்.

விவசாயிகள், தொழிலாளர்கள், 
ஏழை மக்களின் உரிமைக்காக இடைவிடாமல் குரல் கொடுத்தார்.

அனைத்து சமூக மக்களுடன் நல்ல தொடர்பு வைத்திருந்தவர், 
மத நல்லிணக்கம் பேணியவர்,
எளிமை, நேர்மை, தன்னலமின்மை ஆகியவற்றின் உருவகமாக வாழ்ந்த அவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர்.

அவரது மறைவு 
மத நல்லிணக்கம்,சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாடுபடும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், 
அரசியல் தோழர்களுக்கும் 
வல்ல இறைவன் அழகிய பொறுமையை தருவானாக 
என்று 
இந்த நேரத்தில் பிரார்த்தித்து

எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு:
மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ 
மாநிலத் தலைவர் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு&புதுச்சேரி