தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியை முன்னிறுத்தி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் ‘மக்களின் தேர்தல் அறிக்கை’ அறிமுகப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் A. முஹம்மது காசிம் கலந்துகொண்டு
அறிக்கையை வெளியிட்டார்.
7 முக்கிய அம்சங்கள்:
செய்தியாளர்களிடம் பேசிய
முஹம்மது காசிம் தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு ஏழு முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்தார்.
அவை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிர்வாகம்.
ஒழுக்கத்தில் சிறந்த தமிழ்நாடு
சமூக விழுமியங்களைப் பேணும் நற்பண்பு மிக்க மாநிலம்.
நீதியில் சிறந்த தமிழ்நாடு
அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கும் கட்டமைப்பு
அனைத்துப் பகுதிகளும் தங்கு தடையின்றி முன்னேற்றம் காணுதல்.
சுத்தம் போற்றும் தமிழ்நாடு.
தூய்மையான மற்றும் சுகாதாரமான சூழல்.
ஊழல் இல்லாத நிர்வாகம்
வெளிப்படையான மற்றும் நேர்மையான அரசுப் பணிகள்.
போதை இல்லாத மாநிலம்
இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்தல்.
மேற்கூறிய அம்சங்களின் அடிப்படையில் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு அமைய வேண்டும் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விரிவான விளக்கங்களை அளித்தார்.
இந் நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.